கண்ணீர் விட்ட பிரபல சீரியல் நடிகை பிரவீனா!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், பிரியமானவள்
சீரியலுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். கூட்டு குடும்பத்திற்குள் நடக்கும் நல்லது, கெட்டது என அனைத்தையும் அழகாக காட்டி வருகிறார் இயக்குனர்.
இதில் குடும்பத்தலைவியாக மெயின் கேரக்டரில் நடிப்பவர் பிரபல நடிகை பிரவீனா. மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். விக்ரம் நடித்துள்ள சாமி 2  படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.
அண்மையில் பிரியமானவள் நாடகத்தின் குடும்ப விழா நடைபெற்றுள்ளது. இதில் அவரது மகன்களாக நடித்துள்ள 4 நடிகர்களுக்கும், காரம் சாரமான மிளகாய் உண்ணும் போட்டி வைக்கப்பட்டது.
இதில் உண்மையாக அவர்கள் ரிஸ்க் எடுத்து மிளகாய்களை சாப்பிட்டார்களாம். மேலும் தனக்கும் சாப்பிடகொடுக்கலாம் என சொன்ன போது அவர்கள் வேண்டாம் என சொல்லி பிரவீனாவின் பங்கையும் அவர்களே வாங்கி சாப்பிட்டார்களாம்.
மிளகாயை சாப்பிட்டுவிட்டு அவர்கள் பட்ட கஷ்டத்தை பார்த்து தாங்க முடியாமல் அந்த இடத்திலேயே தான் கண்கலங்கி நின்றதாக பிரவீனா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.