ஜனாதிபதிக்கு சவாலாம்??

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இதயசுத்தியுடன் செயற்படத்தயாரா? எனவும் முடிந்தால் செய்து காட்டுங்கள் என
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு சவால் விடுத்துள்ளார்.

பெரியபரந்தனில் இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டத்தினால் உருவாக்கப்பட்ட நெற்களஞ்சியத்தினை திறந்து வைத்து உரையாற்றுகையிலே தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

எம் மண்ணின் விவசாயிகளால் அறுவடை செய்யும் நெற்களை களஞ்சியப்படுத்தி எம்மவர்களின் உழைப்பிற்கேற்ப அவர்களுக்கு வருமானம் கிடைப்பதற்கு ஏற்றவகையிலான களஞ்சிய அறை காயவைக்கின்ற தளம் அமைக்கப்பட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது.

பொலனறுவையில் பொசன் நிகழ்வில் கலந்து கொள்ள சென்ற ஜனாதிபதி அங்குள்ள சிங்கள மக்களுடன் மேலைத்தேய அரசதலைவர்கள் போன்று எளிமையாக நடந்து கொள்கிறார்.

ஆனால் நம்பி வாக்களித்த எம் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.

எமது மக்கள் எல்லாவற்றிற்கும் தெருவில் இருந்து போராடவேண்டிய நிலை காணாமற்போனோர்களினுடைய உறவினர்கள் கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பித்து எதிர்வரும் முதலாம் திகதி 500 நாட்களை கடக்கவுள்ளனர்.

இவர்களுக்கான முடிவுகள் இன்றி தொடர்கிறது எம் தாய்மார்களின் போராட்டம். மறுபுறத்தில் காணிமீட்பிற்காய் போராடிக் கொண்டு இருக்கிறோம்.

அரசியல்க்கைதிகளும் விடிவிற்காய் போராடிக்கொண்டிருக்கிறார்கள் இந்த நாட்டிலே புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினை தொடர்பிலும் எவ்வித அக்கறையுடனும் அரச தலைவர் செயற்படவில்லை சிங்கள் மக்களிடம் மேலைத்தேய அரசியல்வாதிகள் போன்றும் எளிமையானவர் போன்றும் காட்டிக்கொள்ளும் தமிழர்களாகிய எம் முன் இருக்கின்ற பிரச்சினைகளை தீர்க்க இதயசுத்தியுடன் செயற்படத்தயாரா? எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வானது பிரதிநீர்ப்பாசன பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் வேழமாலிகிதன் கரைச்சிப்பிரதேசசபை உறுப்பினர் சிவமோகன் பெரியபரந்தன் கமக்கார அமைப்புக்களின் தலைவார் சு.யதீஸ்வரன் பெரியபரந்தன் கிராமசேவையாளர் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
Powered by Blogger.