புத்தியில்லாத ஊடகங்கள் என சுமந்திரனின் அடம்பிடிப்பும்!

வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி இ ன்ற காலை யாழ்.கடற்றொழில் திணைக்களம் முற்றகையிடப்பட்டது.

ஊடகங்கள் மீது தொடர்ச்சியாக வசைபாடி வரும் சிறிலங்காவின்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்றைய தினம் அறிவில்லாத ஊடகங்கள் என ஊடகவியலாளர்களை பார்த்து கூறிய சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.இதன்போதே நாடாளு மன்ற உறுப்பினர் சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

 மேலும் அங்கு இடம்பெற்ற, போராட்டத்தின் நிறைவில் நீரியியல் வளத் திணைக்கள பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் போராட்டக்காரர்களை வந்து சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது போராட்டக்கார்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் நீரியியல் வளத் திணைக்கள அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அவ்வேளையில் பேச்சுவார்த்தையின் போது அத்துமீறிய தொழிலாளர்களை தாம் நேற்று இன்று நாளை ஆகிய மூன்று தினங்களும் கடலில் வைத்து பிடிப்பதாக நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் தெரிவித்தனர்.

 குறிக்கிட்ட சுமந்திரன் பிடிப்பதாக அறிவித்துவிட்டு பிடித்தால் அவர்கள் அதிலிருந்து தப்பிப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது என்று கூறினார். தற்போது பிடிக்கப்பட இருக்கின்றனர் என்ற செய்தியை ஊடகங்கள் இப்பவே வெளிப்படுத்தி விடுவினம். புத்தியில்லாத ஊடகங்கள் தான் இருக்கின்றது என்று மீண்டுமொருமுறை ஊடகங்கள் தொடர்பில்தன்னுடைய குற்றச்சாட்டை முன்வைத்தார் சுமந்திரன்.
Powered by Blogger.