வட மாகாண ஆளுநரை சந்தித்த இந்து மாமன்றத்தின் செயலாளர்!

இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமைக்கு நல்லை ஆதீன முதல்வர் மற்றும் துர்க்கா தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகன் இந்து மாமன்றத்தின் செயலாளர் உட்பட்ட பிரதிநிதிகள் என பலரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.


இந்த நிலையில், இது தொடர்பில் நல்லை ஆதீன முதல்வர் மற்றும் துர்க்கா தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகன் இந்து மாமன்றத்தின் செயலாளர் உட்பட்ட பிரதிநிதிகள் ஆகியோருக்கும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வட மாகாண ஆளுநர் உடனடியாக ஜனாதிபதியின் செயலாளரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு குறித்த சம்பவம் தொடர்பில் வடமாகாண இந்து மக்களின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரதியமைச்சர் பதவி மாற்றப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்ததாக மதத் தலைவர்களிடம் வட மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.