103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை!

ஆங்கில மருத்துவத்தில் முதியவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வது அரிதான ஒன்றாகும். அதிலும் அதிக வயதுடைய முதியவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வது மிக மிக சவாலுக்குரிய ஒன்றாகும். சென்னை மருத்துவர்கள் இந்த சவாலை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

சென்னையில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனை ஒன்றில், 103 வயதான முன்னாள் அரசு ஊழியர் ஸ்ரீனிவாசன், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை காப்பாற்றும் முயற்சியில் முழுமூச்சாக செயல்பட்டனர்.

103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை எனும் அசாத்திய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். இதுதொடர்பாக எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் லக்சுமி  நாதன் கூறுகையில், சுமார் 90 நிமிடங்கள் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு இந்த அறுவை சிகிச்சையை சிறப்பாக மருத்துவர்கள் குழு செய்து முடித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், மிக விரைவில் ஸ்ரீனிவாசன் தனது வீட்டிற்கு திரும்பலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.