நாளை தினம் சந்திர கிரஹணம்(வேதியன்)

விளம்பி வருடம் ஆடி மாதம் 11ம் தேதி (27-7-2018) வெள்ளிக்கிழமை உத்திராடம் நட்சத்திரத்தில் ஆரம்பமாகிறது.

இரவு மணி 11-57க்கு ஆரம்பமாகி இரவு 1-52 க்கு பூரண கிரஹணம் ஏற்பட்டு பின் இரவு மணி 3-47க்கு திருவோண நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் மோட்சம் பெறும். இந்தியாவில் நன்கு காண இயலும். இலங்கையில் தென்படும் தன்மை குறைவாக இருக்கும் மொத்த கிரஹண நாழிகை 9-35விநாழிகை நடக்கும்.3 மணி நேரம் 50நிமிடத்தில் முற்றும் அகன்று விடும்.

கிரஹணம் முடிந்ததும் வீடு மற்றும் ஆலயம் சுத்தம் செய்து  பூஜைகள் செய்யவும்.
தண்ணீர் மற்றும் உணவில் தர்ப்பையை போட்டு வைத்து பயன் படுத்துவது நன்மை.

விழாக்கள் உற்சவங்களை நாளை இரவு 27.07.2018 வெள்ளி 10.30 மணிக்கு முன்னர் முடிப்பது சாலச் சிறந்ததாகும். அதிகாலையில் புண்ணியாகவாஜனம் மற்றும் பரிகார பூஜைகளின் பின் வழமையான நிகழ்வுகளைச் செய்யலாம்.

திதி சிரார்த்தம் மறுநாள் செய்யவும்.

கிரஹண காலத்தில் கர்ப்பிணிகள் சந்திர தரிசணம் செய்யக்கூடாது.

No comments

Powered by Blogger.