இலங்கையர்கள் உள்ளிட்ட13புகலிட கோரிக்கையாளர்கள் உக்ரைன் எல்லையில் கைது!

உக்ரைன் எல்லை பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட 13 புகலிட கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஆறு பேரிடம் ஆவணங்கள் எவையும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு செல்லும் நோக்கிலேயே அவர்கள் அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக எல்லை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.