யாழில் ஆவா குழுவால்15 வயது சிறுமி பாதிப்பு!

யாழ் – தெல்லிப்பழையில் வீடு ஒன்றுக்குள் புகுந்து ஆவா குழுவினர் நடத்திய தாக்குதலில் சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார்.


குறித்த சம்பவம் நேற்று இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக வடமாகாணத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழுவினர், மற்றுமொரு குழுவான தனுரொக் குழுவின் உறுப்பினர் ஒருவருடைய வீட்டிலேயே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் அவ்வீட்டிலுள்ள 15 வயதுச் சிறுமி தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேரே இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.