வவுனியா வர்த்தகர் சங்கம் 20 வருடங்களின் பின்னர் இளைஞர்களின் வசம்!

வவுனியா வர்த்தகர் சங்கமானது கடந்த 20 வருடங்களின் பின்னர் புதிய தலைமுறையினரின் இளைஞர்களின் கைகளுக்கு நேற்று இடம்பெற்ற
பொதுச்சபையின் வருடாந்த பொதுக்கூட்டத்தின் பின்னர் வசமானது. கேந்திர முக்கியத்துவமிக்க பல்லின சமூக கட்டமைப்புக்களைக் கொண்ட வவுனியா மாவட்டத்தின் முதுகெழும்பாகவுள்ள வர்த்தகர் சங்கம் முதல் முறையாக பதிய தலைமுறையினர் வசமாகியுள்ளது. இதனால் பல எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது புதிய நிர்வாக வர்த்தகர் சங்கம் மிகவும் சவால் மிக்க காலகட்டத்தில் தற்போது இளைஞர்களின் வசமாகியுள்ள வர்த்தகர் சங்கத்தின் செயற்பாடுகளை கட்சி பேதமின்றி பக்கச்சார்பு இன்றி மேற்கொள்வதுடன் வர்த்தகர்களின் எதிர்காலத்தில் அக்கறையுடனும் நலனின் கரிசனையுடன் திடமாக செயற்படுவதுடன் பழைய பேருந்து நிலையத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சீராற்ற நிலையிலிருந்து மீண்டு வருவதற்கு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டிய பாரிய பொறுப்புக்களுடன் புதிய நிர்வாகத்தினர் தமது கடமைகளை மேற்கொள்ளவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.