உலக கோப்பை கால்பந்து போட்டியின்போது ரஷியாவை குறிவைத்து 2.5 கோடி சைபர் தாக்குதல்கள்!

அமெரிக்காவுக்கு நிகரான வல்லரசு நாடாக
ஒருகாலத்தில் கருதப்பட்ட சோவியத் யூனியன் உடைந்த பின்னர் தனிநாடுகளாக சோவியத் யூனியன் அமைப்பு சிதறிப்போனது. குறிப்பாக, செர்னோபில் அணுஉலை விபத்துக்கு பின்னரும், அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளாலும் ரஷியா நிதிசார்ந்த விவகாரங்களில் சிறிது தள்ளாட்டத்தை எதிர்கொள்ள நேரிட்டது.

இடையில், உக்ரைன் நாட்டை உடைத்து கிரிமியா என்னும் தனிநாடு உருவாக்கியது மற்றும் சிரியா விவகாரத்தில் அதிபருக்கு ஆதரவாகவும், அமெரிக்காவின் கருத்துக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதுபோன்ற நடவடிக்கைகளால் ஐரோப்பிய நாடுகளின் தாக்குதலுக்கு ரஷியா உள்ளானது.
இதற்கிடையில், ‘பிபா’ என்னும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளை ரஷியா வெற்றிகரமாக நடத்தி காட்டியது. இன்று குரோஷியா - பிரான்ஸ் மோதும் இறுதிப்போட்டி நேற்று மாஸ்கோ நகரில் நடந்து முடிந்தது.
இந்நிலையில், ரஷியா உள்நாட்டு பாதுகாப்பு உயரதிகாரிகள் கூட்டத்தில் நேற்று பேசிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், உலக கோப்பை கால்பந்து போட்டிகளுடன் தொடர்புடைய ரஷியாவின் சுமார் இரண்டரை கோடி இணையதளங்கள் ‘சைபர்’ தாக்குதல்களுக்கு இலக்கானதாகவும், அந்த தாக்குதல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இந்த தகவலை அதிபரின் கிரெம்ளின் மாளிகை இன்று வெளியிட்டுள்ளது.
Powered by Blogger.