கோத்தபாயா உட்பட7 பேரை நீதிமன்றத்தில்ஆஜராகுமாறு உத்தரவு!
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் டி.ஏ. ராஜபக்ச நினைவு அருங்காட்சியகம் ஒன்றை நிர்மாணிக்க 80 மில்லியன் ரூபாவுக்கும் மேலான அரச பணத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேக நபர்களான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட 7 பேரை எதிர்வரும் செப்டம்பர் 07 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்தி முடித்து அனைத்து அறிக்கைகளும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனடிப்படையில், அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட 7 சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிப்பாணை விடுக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கோத்தபாய ராஜபக்ச உட்பட 7 சந்தேக நபர்களை எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிப்பாணை அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.
#Gotabhaya Rajapaksa

.jpeg
)

கருத்துகள் இல்லை