வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயம்!

வவுனியா – கோவில்குளம் இந்துக்கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.

முச்சக்கர வண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் ஒன்றுடன் மோதுண்டதனாலேயே இன்று(சனிக்கிழமை) நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதி, இரண்டு பெண்கள் மற்றும் 9 வயதுடைய சிறுவன் ஒருவனுமே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

#vavuniya  #Tamil_news   #kovikulam  #Accident 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.