அமைச்சர் என பெயர் புகழ் விரும்பும் ரனிலின் அனந்தி சசிதரன்.!

வடக்கு மாகாண மகிளிர் சிறுவர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தன்னை ஓர்  அமைச்சர் என தேசிய அடையாள அட்டையில் பொறிப்பதற்காக உறுதிப்படுத்தல் கடிதம் வழங்குமாறு கோருகின்றார்.

வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களில் ஒருவரான அனந்தி சசிதரன் தனது தேசிய அடையாள அட்டையின் தொழில் எனக்கோரும் பகுதியில் மாகாண அமைச்சர் எனப் பொறிக்கும் வகையில் உறுதிப்படுத்தல் கடிதம் ஒன்றினை வழங்குமாறு விண்ணப்பித்துள்ளார்.

வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு குறித்த விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார். கடந்த வாரம் விண்ணப்பித்த மேற்படி வேண்டுதல் தொடர்பில் பிரதம செயலாளர் அலுவலகம் இதுவரை எந்தப் பதிலும் அனுப்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் வடக்கு மாகாண சபையில் தற்போது 6 அமைச்சர்கள் உள்ள நிலையில் யார் பதவி இழப்பர் என்பது தொடர்பில் கேள்வி எழும் நிலையிலும் வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலமே முடிவடைவதற்கு இன்னமும் 3 மாதம் மட்டுமே உள்ளபோது மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

#Ananthi  #srilanka  #Tamilnews  #jaffna #I_D_card

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.