அனந்தியின் கைத்துப்பாக்கி விவகாரத்தால் போர்க் களமான வடக்கு மாகாண சபை!

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கிக்கு விண்ணப்பித்தமைக்கான சான்றாதாரங்களை சுமந்திரன் அணி உறுப்பினர் அஸ்மின் இன்றைய சபை அமர்வில் முன்வைத்துள்ளார்.

அத்துடன் மேலதிக சான்றாதாரங்களை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ள அஸ்மின் மறுபுறம் வடமாகாணசபை தேர்தலின் போது நடைபெற்ற அனந்தி வீட்டின் மீதான துப்பாக்கி பிரயோகம் மற்றும் உதயன் பின்னணியில் வெளியான போலி பத்திரிகை தொடர்பில் தன்னிடம் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அதனை காலம் சூழல் கருதி தான் வெளியிடவுள்ளதாகவும் அஸ்மின் தெரிவித்துள்ளார்.


அத்துடன் அனந்தியின்; விண்ணப்பப்பிரகாரம் கைத்துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளதாவென்ற விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அஸ்மின் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வடமாகாண அமைச்சர் அனந்தியினால் கைத்துப்பாக்கி கோரி விண்ணப்பித்த கடிதத்தின் பிரதி அஸ்மின்,சயந்தன் ஆகியோரால் இன்றைய சபை அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் கைத்துப்பாக்கி கோரி தான் விண்ணப்பித்தமை பற்றி வாய்மூடிக்கொண்ட அனந்தி தற்போது கையில் துப்பாக்கி இல்லையென்பது பற்றி பின்னர் பேசமுற்பட அவருக்கு ஆதரவாக அமைச்சின் சர்வேஸ்வரன், சிவாஜிலிங்கம் என சிலர் முண்டுகொடுத்தனர்.தான் எழுதி வந்த உரையினை ஆற்ற கடைசி வரை முண்டியடித்த போதும் அதற்கு அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அனுமதித்திருக்கவில்லை.

இதனிடையே உறுப்பினர் சயந்தன் முன்னர் தானே அனந்திக்கு பெண் காவலர் ஒன்றை பெற்றுக்கொண்டதனையும் நினைவுகூர்ந்தார். 

No comments

Powered by Blogger.