ஜுங்காவில் இணைந்த ‘விஜய் டிவி’ பாலா!
ஜுங்கா திரைப்படத்தின் ‘லோலிக்கிரியா’ என்ற பாடலின் மேக்கிங் வீடியோ நேற்று (ஜூலை 18) வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி, சாயிஷா, மடோனா செபாஸ்டின் இணைந்து நடிக்கும் ஜுங்கா திரைப்படம் ஜூலை 27ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள ‘லோலிகிரியா’ என்ற பாடல் உருவான விதத்தை மேக்கிங் வீடியோவில் தெரியப்படுத்தியுள்ளார் இயக்குநர் கோகுல்.
படத்தில் திருவொற்றியூரைச் சேர்ந்த தினேஷ் என்ற கதாபாத்திரம் வெளியிட்ட பாடல் உலகம் முழுவதும் ஹிட் அடிக்கிறது. பிரான்ஸில் இருந்து அவருக்கு அழைப்பு வர அங்கு சென்று ரசிகர்களோடு நடனமாடுகிறார். இந்தக் கதாபாத்திரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா நடித்துள்ளார். அவரோடு விஜய் சேதுபதி, சாயிஷா இணைந்து நடனமாடுகின்றனர். பாடலுக்கு நடனமாடுவதோடு முக்கியக் காட்சியிலும் பாலா நடித்துள்ளார்.
சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். பாடலுக்கு ‘மரண கானா’ விஜி மற்றும் பாலிவுட்டில் சல்மான் கான், ஷாருக் கான் ஆகியோரின் பாடல்களுக்கு குரல் கொடுக்கும் நாகாஷ் அஸிஸ் பாடியுள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை