ஏறாவூரில் மாட்டு இறைச்சி,குப்பைக் கழிவுகளினால் மக்கள்பெரிதும் பாதிப்பு!
ஏறாவூர் நகரசபையினால் சேகரிக்கப்படும் மாட்டு இறைச்சி, குப்பைக் கழிவுகளினால் மக்கள்பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் நகரசபையினால் ஏறாவூர் நகர்ப்பகுதிகளில் திண்மக்கழிவுகள் தினமும் சேகரிக்கப்பட்டு அக்கழிவுகள் ஏறாவூர் வாவிக்கரையோரத்தில் கொட்டப்பட்டு வருகின்றது.
சேகரிக்கும் திண்மக்கழிவுகளில் அதிமாக இறைச்சிக்காக வெட்டப்படம் மாடு, கோழி, ஆடு போன்றவற்றின் கழிவுகளே அதிலும் அதிகமான காணப்படுகிறது.
குறிப்பாக மாட்டு இறைச்சி கழிவுகள் நகரசபையினால் சேகரிக்கப்பட்டு வாவிக்கரையோரத்தில் காணப்படும் குப்பை மேட்டில் கொட்டப்படுகின்றது.
இவ் வாவிக்ரையோர குப்பை மேடானது தமிழ் முஸ்லிம் பிரதேச எல்லை பகுதிகளில் காணப்படுவதால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறியள்ளனர்.
குப்பை மேட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் தான் ஏறாவூர் 5ம் குறிச்சி வீரபத்திரர் சுவாமி ஆலயமும் அதனருகே மகமாரி அம்மன் ஆலயமும் மற்றும் ஏறாவூர் விபுலானந்தா வித்தியாலய பாடசாலையும் காணப்படுவதால் அதில் இருந்து வரும் துர்நாற்றங்கள் இந்து மத சடங்குகளுக்கும் சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிப்பதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டியள்ளனர்.
சேகரிக்கப்டும் இக் கழிவுகள் குறிப்பாக மாட்ட இறைச்சிகழிவுகளை இக் குப்பை மேட்டில் கொட்டுவதால் இப் பகுதி மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் துர்நாற்றத்தல் மிகவும் அசௌகரியங்களுக்கு ஆளாகிவருவதுடன் தலைசுற்று வாந்திபேதி போன்ற நோய் தாக்கத்திற்கும் உள்ளாவதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பல தடவைகள் ஏறாவூர் நகரசபை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு உள்ளுராட்சி சபை அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
#batti #srilanka #Befmeet

.jpeg
)

கருத்துகள் இல்லை