வடமாகாண முதலமைச்சரின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

டெனிஸ்வரனின் அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டமைக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடையை எதிர்த்து வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, இதன்போது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தன்னுடைய அமைச்சுப் பதவியை முதலமைச்சர் நீக்கியது தவறு எனக் குறிப்பிட்டு டெனிஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், டெனீஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சு பதவியில் நீடிக்கலாம் என்றும் முதலமைச்சர் நீக்கியது செல்லுபடியற்றது என்றும் கடந்த 29ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை எதிர்த்து வட மாகாண முதலமைச்சர் மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.