கிழக்கு ஆளுநரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட தொண்டராசிரியர்கள்!

நிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்குமாறு கோரி தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிழக்கு தொண்டராசிரியர்கள் ஆளுநரின் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.


கிழக்கு ஆளுநர் அலுவலகத்தின் பிரதான வாயிற் கதவை மூடியவாறு குறித்த தொண்டராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைய தினம் ஆளுநர் அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில், மக்களை உள்ளே வர விடாமலும், உள்ளிருந்து யாரும் வெளியே செல்ல முடியாமலும் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசிரியர்கள் 456 பேருக்கும் நிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்குமாறு கோரி கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் கிழக்கு தொண்டராசிரியர்கள் இன்றுடன் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர்.

மேலும், நிரந்தர நியமனம் வழங்கும் திகதியை அறிவிக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.