யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றம் இந்திய மீனவர்களுக்கு வழங்கிய தண்டனை!

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டமை மற்றும் தடை செய்யப்பட்ட இழுவைமடி மீன்பிடியில் ஈடுபட்டமை
ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்திய மீனவர்கள் 16 பேருக்கு ஐந்து ஆண்டுகள் ஒத்திவைத்த இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை(13) தீர்ப்பளித்துள்ளது.

மேலும்,புதிய சட்டத்தின் கீழ் படகுகளின் உரிமையாளர்களுக்குத் தண்டப் பணம் அறவிடுவதா? அல்லது அரசுடைமையாக்குவதா? எனும் கட்டளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் எனத் தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தார்.

இதேவேளை, இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த-05 ஆம் திகதி 12 இந்திய மீனவர்களும், கடந்த- 08 ஆம் திகதி அதிகாலை நான்கு மீனவர்களும் யாழ்.நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கே ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.







கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.