யாழ் வேலணை மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்!

வேலணை பிரதேச சபைக்கு உட்பட்ட நல்ல தண்ணீர் கிணறுகள் உவர் நீராக மாற்றுவதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேலணை பிரதேச சபை தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


வேலணை பிரதேச சபை, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊடாக மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கப்படுகின்றது.

சாட்டி பிரதேசத்தில் உள்ள 11 கிணறுகளில் இருந்து இந்த நல்ல தண்ணீர் பெறப்படுகின்றது. இந்த கிணறுகளில் இருந்து மேலதிகமாக தண்ணீர் எடுக்கபட படுவதால், உவர் நீர் பிரதேச நீர் நிலைகள் அண்மையில் உள்ளமையால் மூன்று நல்ல தண்ணீர் கிணறுகள் உவர் நீராக மாறியுள்ளது.

ஏனைய கிணறுகளும் எதிர் காலத்தில் உவர் நீர் ஆகும் அபாயம் நிலவுகின்றது. எனவே மக்கள் தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.