அரசியலை விட்டு விலகப் போவதில்லை-விஜயகலா!

விடுதலைப் புலிகள் புத்துயிர் பெற வேண்டும் என்று ஏன் கூறினீர்கள் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அமைச்சர் பதவியை இழந்தாலும், தான் அரசியலை விட்டு விலகப் போவதில்லை என்று தெரிவித்தார்.

இந்தவிடயம் தொடர்பான விசாரணைகள் முடியும் போது இதற்கான பதில் கிடைத்து விடும். எனினும், இனவெறுப்பை தூண்டும் நோக்கில் நான் விடுதலைப் புலிகள் பற்றி கருத்து வெளியிடவில்லை. நான் அமைச்சர் பதவியை இழந்திருக்கக் கூடும்.

ஆனாலும், அரசியலை விட்டு விலக மாட்டேன். தொடர்ந்து மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Powered by Blogger.