யாழில் நேருஜி கலாமன்றம் அங்குரார்ப்பணம்!

யாழ்ப்பாணம் வட்டுக் கோட்டை கலைநகரில் புரவி ஆட் டத்துடன் நேருஜி கலாமன்றம் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு கடந்த பத்தாம் திகதி மாலை ஐந்து மணிக்கு நேருஜி சனசமூக முன்றலில் இடம்பெற்றது .


சனசமூக நிலைய தலைவர் தெ .கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் த.நடனேந்திரன் பிரதம அதிதியாகவும், பிரதேச கலாசார அலுவலர் அ .அமலதாஸ் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்,

மேலும் ஆசிரியர் திவாகரனின் இறைவணக்கத்துடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் விதிகள் யாப்புகளுக்கு அமைவாக கலாமன்றங்களை பதிவு செய்யும் நடவடிக்கையின் பிரகாரம் கடந்த 1956 .10.19 இல் ஆரம்பிக்கப் பட்ட நேருஜி சனசமூகத்துடன் இணைந்து கடந்த 10.07.2018 இல் நேருஜி கலாமன்றம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வின் அங்கமாக நேருஜி கலை மன்ற தலைவராக தி.கஜேந்திரன் , துணைத் தலைவராக தா.குமரதாசன், செயலாளராக போ ,திவாகரன் , உப செயலாளராக தி.இளங்குமரன், பொருளாளராக ச.லோகநாதன் ,கணக்காய்வாளராக தெ .ரவீந்திரன் ஆகியோருடன் செயற்குழு உறுப்பினர்களாக ந.ரஜீவ் பொ .கோவை ஆனந்த் , சி.குகதாஸ் , சி.சிவதாசன் ,திருமதி இ .கோமதனி , மற்றும் திருமதி லோ .யதீசா ,ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இறுதியில் அவையினோர் பாராட்டும் வகையில் புரவி ஆட்டமும் இடம் பெற்றது.

-ப.தர்மினி-

No comments

Powered by Blogger.