இலங்கை கன்டி வீதியில் கிடந்த 2 லட்சம் ரூபா!

இரண்டு இலட்சம் ரூபாவிற்கும் அதிக வெளிநாட்டு பணம் மற்றும் அடையால அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் உள்ளடங்கிய கைப்பை கண்டிநகரில் விழுந்திருக்கையில் கண்டெடுத்த ஆறு இளைஞர்கள் அதன் உரிமையாளரை கண்டறிந்து கையளித்துள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஈராக் நாட்டின் பக்தாத் பல்கலைகழக பேராசிரியர் ஒருவருக்கு சொந்தமான பணம் மற்றும் ஆவணவங்களையே குறித்த இளைஞர்கள் கையளித்துள்ளனர்.

அதன் உரிமையாளர் ஈராக் நாட்டின் பக்தாத் பல்கலைகழக பேராசிரியர் ஒருவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது

குடுகலையில் அமைந்துள்ள ஐச்சி லைன் நிறுவனத்திற்கு அழைத்து அவரது பணம் உட்பட ஆவணங்களை அவரிடம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.