கிளிநொச்சி விவசாயிகளுக்கான தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை திறந்துவைப்பு!

கிளிநொச்சி விவசாயிகளுக்கான தானிய பாதுகாப்பு களஞ்சியசாலை இன்று(சனிக்கிழமை) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று நண்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் 265 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டடத்தொகுதியே இதன்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில், நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் ரிசாட் பதியூதீன், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, இலங்கையில் அமைக்கப்பட்ட 4வது களஞ்சியசாலை இது என்பது குறிப்பிடதக்கது.
#killinochi #Ranil  #Tamil_news  #Fammers_store

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.