மஹாசோன் பலக்காய தலைவருக்கு பிணையில்லை!

கண்டி, திகன மற்றும் தெல்தெனிய ஆகிய பிரதேசங்களில் கடந்த மார்ச் மாதம் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள மஹாசோன் பலக்காய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அமித் வீரசிங்க உட்பட 8 சந்தேக நபர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இன்று தெல்தெனிய மாவட்ட நீதவான் சானக கலன்சூரிய முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர், நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கண்டி சம்பவங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த 10 பேருக்கு கடந்த 9 ஆம் திகதி பிணை வழங்கப்பட்டது.   

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.