நாயாறு மற்றும் செம்மலை பகுதிகளில் மக்களின் விவசாய நிலத்தை சுவீகாிக்க முயற்சி!

முல்லைத்தீவு நாயாறு நீராவிப்பிட்டி ஏற்றம் பகுதியில் மக்களுக்கு சொந்தமான பல ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலத்தை தொல்லியல் திணைக்களத்திற்கு சுவீகரிப்பதற்காக அளவீடு செ ய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சி மக்களுடைய எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.


நாயாறு மற்றும் செம்மலை பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்களுக்கு உப உணவு பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை தொல்லியல் திணைக்களம் சுவீகரி ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் அந்த நிலத்தில் சுமார் 2500 வருடங்களுக்கு முன்னர் பௌத்தர்கள் வாழ்ந்ததாகவும், பௌத்த விகாரைகள் அந்த நிலத்தில் இருந்ததாகவும் கூறிவருகின்றனர். இந்நிலையில் மேற் படி காணியை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்வதற்காக இன்று காலை

நில அளவை திணைக்களம் முயற்சித்திருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காணி உரிமையாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகா ணசபை உறுப்பினர் கள் நிலத்தை அளவீடு செய்வதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும் நில அளவை திணைக்களத்தினர் நிலத்தை அளவீடு செய்ய இடமளிக்காது மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் போராட்டத்தையும் நடத்தியிருந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலர் அழைக்கப்பட்டு

பிரதேச செயலருடன் மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து எதிர்வரும் 9ம் திகதி நடைபெறவிருக்கும் கரைதுறைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பக பேசி தீர்மானிப்பது எனவும்

அதுவரையில் மக்களுடைய காணிகளை மக்களுடைய ஒப்புதல் இல்லாமல் அளவீடு செய்ய கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து நில அளவையாளர்கள் அங்கிருந்து விலகி சென்றுள்ளனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.