ஓவியா ஆர்மிக்கு ஒரு குட் நியூஸ்!

நடிகை ஓவியா நடிப்பில் உருவாகிவரும் களவாணி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மாதவன் வெளியிட்டுள்ளார்.


களவாணி படம் 2010ஆம் ஆண்டு வெளியாகிப் பலரின் கவனத்தையும் பெற்றது. அந்தப் படத்தில் அறிமுகமான ஓவியா தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இருப்பினும் முன்னணி கதாநாயகி பட்டியலில் அவர் இடம்பெறவில்லை. விமல், சிவா, கதிர், சிவகார்த்திகேயன் (முதல் படம்) தவிர மற்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை அவர் பெறவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சில் அவர் பங்கேற்ற பின் அவரது வாழ்க்கை திருப்புமுனையாக அமைந்தது . இந்த நிகழ்ச்சியில் ஓவியாவின் அணுகுமுறை, எதையும் பாஸிட்டிவாக எடுத்துக்கொள்ளும் மனோபாவம் ஆகியவை அவருக்குத் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துக்கொடுத்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சற்குணம் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான 'களவாணி' படத்தின் இரண்டாம் பாகம் களவாணி-2 ஆக எட்டாண்டுகளுக்குப் பிறகு தயாராகியுள்ளது. விமல், ஓவியா மீண்டும் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தை, சற்குணமே தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கை சற்குணம் அடுத்து இயக்கும், ‘மாறா’ படத்தில் நாயகனாக நடிக்கவுள்ள நடிகர் மாதவன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓவியா சம்பந்தமான செய்தி வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Powered by Blogger.