தொண்டராசிரியர்கள் புதிதாக நியமனம் பெற்ற சேவை முன் பயிற்சி!

வடக்கு மாகாணத்தில் புதிதாக நியமனம் வழங்கப்பட்ட 457 தொண்டராசிரியர்களுக்கு 3வாரகாலம் சேவை முன் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.

இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

வடக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக தொண்டர் அடிப்படையில் பணியாற்றிய தொண்டர்களில் 457பேருக்கு கடந்த 22ம் திகதி தரம் 3-11ல் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.

அதேபோல் கடந்த மார்ச் மாதம் 28ம் திகதி 182 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. இவ்வாறு இரு கட்டங்களாக நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட 639 ஆசிரியர்களிற்கும் குறித்த சேவை முன் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

ஓகஸ்ட் மாதத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் வதிவிட சேவைக்கால பயிற்சியாக குறித்த பயிற்சிகள் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இதற்காக வடக்கு மாகாண கல்வி அமைச்சு மத்திய கல்வி அமைச்சின் செயலாளர் கெட்டியாராச்சியுடன் தொடர்புகொண்டு அனைத்து ஏற்பாடும் இடம்பெறுகின்றது.

குறித்த பயிற்சி நெறியில் மேற்படி ஆசிரியர்கள் பங்குகொள்வது கட்டாயமானது. ஏனெனில் குறித்த பயிற்சி நெறி அவர்களின் கற்பித்தல் பணிக்கு பெரிதும். உறுதுணையானது. என்றார். 

No comments

Powered by Blogger.