சமூக ஊடகப் பிரிவு மீது செக்ஸ் புகார்…. பாலியல் குண்டு வீசிய இளம் பெண்…. ராகுலுக்கு கடிதம்

டெல்லி காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவில் பணி புரிந்த  பெண் ஒருவர், அங்கு கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கட்சியின் தலைவர் ராகுல் காந்தியிடமும், டெல்லி போலீசிலும் புகார் அளித்துள்ளார். இந்த புகார் அக்கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது..


காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் பொறுப்பாளராக  இருப்பவர் திவ்யா ஸ்பந்தனா. கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தி மற்றும் நடிகையுமான இவர், காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி.யாக இருந்தவர். தற்போது அக்கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் பொறுப்பாளராக உள்ளார்.இந்நிலையில் திவ்யாவின் உதவியாளர் சிராக் பட்நாயக் மீது , அங்கு பணி புரிந்த  நௌஷீன் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 28 வயது இளம் பெண் ஒருவர் செக்ஸ் புகார் கொடுத்துள்ளார். கடந்த  ஜுன் 11 ஆம் தேதி டெல்லி காவல் துறை ஆணையர் அமுல்யா பட்நாயக்கிடம் இது குறித்து புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து  சிராக் பட்நாயக் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசில் அந்த பெண் அளித்த புகாரின் ஒரு நகலையும், எஃப்ஐஆர் நகலையும் நௌஷீன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கும், அக்கட்சியின்  கீரீவன்ஸ் செல் தலைவர் அர்ச்சனா டால்மியாவுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

அந்த புகாரில், காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவில் கடந்த மார்ச் 5 ஆம்  தேதி தான்  பணியில் சேர்ந்ததாக நௌஷீன்  குறிப்பிட்டுள்ளார்.  கட்சிக்கான டுவிட்டர் மற்றும் மக்கள் தொடர்பு விஷயங்களை கையாண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகப் பிரிவின் தலைவர்  திவ்யா ஸ்பந்தனாவின்  உதவியாளர் சிராக் பட்நாயக்குடன் இணைந்து டெல்லி குருத்வாரா ராக்பஞ்ச்  பகுதியில் உள்ள சமூக ஊடகவியல்  அலுவலகத்தில் நௌஷீன் பணியாற்றினார்.
தான் உண்டு தன் வேலை உண்டு என்ற பணியாற்றிக் கொண்டிருந்த நௌஷீன், மீது ஒரு நாள் திடீரென சிராக் பட்நாயக் கை வைத்தார். நௌஷீனின் கைகளிலும்,  தோள்களிலும் டைப் அடிப்பதைப் போல் செய்தார். இந்த செயலால் தான் அருவருப்படைந்ததாகவும், அவர் நடந்து கொண்ட விதம்  தனக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நௌஷீன் அமர்ந்திருக்கும் சீட்டுக்கும், சிராக் பட்நாயக்கின்  சீட்டுக்கும் இடையே 1 புள்ளி 2 மீட்டர் தூரம்தான் இருக்கும். சிராக் அந்த  சீட்டிலிருந்த தனது ஷு அணிந்த கால்களை தன்  மீது நீட்டி உட்கார்ந்து கொண்டு தன்னை அவமானப்படுத்துவார் என்றும் நௌஷீன் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

சிராக் தன்னையும் தன் உடலையும் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதை உணர்ந்த போது  அதிர்ச்சி அடைந்ததாகவும், ஆனால் இது நாள்தோறும் நடப்பதால் எதுவும் செய்ய முடியாமல் தவித்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் சமூக ஊடகப் பிரிவின் முழு  அதிகாரமும் சிராக் பட்நாயக்கிடம் இருந்ததால்,  தான் வேலையை இழந்து விடுவோமோ என்ற பயம் காரணமாக இதை வேறு யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார் நௌஷீன்.
அதே நேரத்தில் சிராக் பட்நாயக்கின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. அவரது தவறான நடவடிக்கைகளை பல முறை நேரடியாகவும், மறைமுகமாகவும்  நௌஷீன் கடுமையாக எதிர்த்துள்ளார்,

சிராக் பட்நாயக்கின் தொடர் பாலியல் தொல்லைகளை பொறுக்க முடியாத நௌஷீன் இது குறித்து, திவ்யா ஸ்பந்தனாவிடம் புகார் அளித்தார். ஆனால் அவர் இந்த புகாரை கண்டு கொள்ளவில்லை.  ஆனால் அதற்குப் பிறகு  சிராக் மன ரீதியான தொந்தரயைகொடுக்கத் தொடங்கினார்.

திவ்யா ஸ்பந்தனாவும் நௌஷீன் மீதே ஒழுங்காக வேலை செய்வதில்லை எனக் கூறி தனது திறமையை அவமானப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். மே 17 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், குழப்பமாகவும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

திவ்யா ஸ்பந்தனாவும் தனது நடத்தையை குறை சொல்லிக் கொண்டே இருந்ததாகவும், மேலும் தனது பணி மற்றும் நடத்தை  விஷயத்தில் கேள்விக்குள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் உடைந்த போன நான் அந்த அலுவலகத்தில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் குறிப்பிடுள்ளார்.

தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த சிராக் பட்நாயக் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நௌஷீன்  அந்த புகாரில் தெரிவித்துள்ளர்.
புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நௌஷீன், தற்போதைய இந்த போராட்டம் தனக்கும் சிராஜ் பட்நாயக்கிற்கும்னது என்றும், தனக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இடையேயான  சண்டை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பொறுப்பாளர் திவ்யா ஸ்பந்தனா, இதனை முற்றிலும் மறுத்துள்ளார். சிராக் பட்நாயக் மீது  எந்தப் புகாரும் வந்ததில்லை என்றும், நௌஷீன் இந்தப் பதவியில் இருந்து விலகியதற்கு உடல்நிலை மற்றும் அவரது தனிப்பட்ட காரணங்கள்தான் என்று தெரிவித்துள்ளார்.

50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்த   காங்கிரஸ் கட்சியில் மிகப் பெரிய செக்ஸ் குற்றச்சாட்டு எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பயன்படுத்தி பாஜகவும் குளிர்காய திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.