ஈரானில் இன்று மூன்றாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம்

ஈரான் நாட்டின் தென்பகுதியில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் இன்று இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.7 மற்றும் 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் உண்டான பாதிப்பு தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இந்நிலையில், நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கேர்மன்ஷா மாகாணத்தில் சில மணி நேரத்துக்கு பின்னர் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 5.9 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தில் 25 பேர் காயமடைந்ததாக கேர்மன்ஷா மாகாண கவர்னர் ஹவுஸாங் பஸ்வன்ட் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக ஈரான் நாட்டின் சில பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கேர்மன்ஷா மாகாணத்தில் ஏற்பட்ட 7.3 ரிக்டர் நிலநடுக்கத்துக்கு சுமார் 620 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.