பயண நேரத்தை பாதியாக குறைக்க மீண்டும் வருகிறது ஒலியை மிஞ்சும் சூப்பர் சோனிக் விமானங்கள்

ஒலியை மிஞ்சும் வேகத்தை, மாக் என்ற அளவையால் விஞ்ஞானிகள் குறிக்கின்றனர். இதை, சூப்பர்சோனிக் வேகம் என்றும் அழைப்பர். அதனடிப்படையில், ஒலியை விட வேகமாக பறக்கும் விமாங்கள் சூப்பர் சோனிக் விமாங்கள் என அழைக்கப்படுகிறது.

முதன்முதலாக பெல் எக்ஸ்-1 எனும் விமானம் 1947-ம் ஆண்டு ஒலியை விட வேகமாக பயணித்த உலகின் முதல் சூப்பர் சோனிக் விமானம் எனும் பெருமையை பெற்றது. போர் விமானங்களில், 1954-ம் ஆண்டில் எப்-100 சூப்பர் சாப்ரே எனும் முதல் சூப்பர் சோனிக் போர் விமானம் உருவாக்கப்பட்டது. ஆனால், அப்போதைய சோவியத் யூனியன் முதல்முதலாக சூப்பர் சோனிக் பயணிகள் விமானத்தை தயாரித்து பயன்பாட்டிற்கு விட்டது.

எனினும், 1976-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகளின் கூட்டுத்தயாரிப்பான கான்கார்டு ரக விமானங்கள் சூப்பர் சோனிக் விமான சேவையில் சிறந்து விளங்கின, ஆனால் 2000-ம் ஆண்டு 109 பேரை பலிவாங்கிய கான்கார்டு விமான விபத்து மற்றும் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு 2003ஆம் ஆண்டு கான்கார்டு  சூப்பர் சோனிக் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில்,  சூப்பர் சோனிக் விமான சேவை நிறுத்தப்பட்ட 15 ஆண்டுகள் கழித்து சொந்த விமாங்களை வாங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மற்றும் சர்வதேச பயணிகள் அதிகரித்து வருவது ஆகியவற்றை இலக்கு வைத்து, ஏரியோன் சூப்பர்சோனிக், ஸ்பைக் ஏரோஸ் பேஸ், பூம் சூப்பர்சோனிக் மற்றும் போயிங் போன்ற விமான தயாரிப்பு நிறுவனங்கள் சூப்பர் சோனிக் விமானங்களை தயாரிக்கும் முயர்ச்சியில் ஈடுப்பட்டுள்ளன.

சில மணி நேரங்களில் உலகின் எந்த ஒரு இடத்திற்கும் செல்லும் ஆற்றல் கொண்ட இந்த அதிவேக விமாங்கள் அடுத்த சில வருடங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இவை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், சாதாரணமாக நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு பயணிக்க 7 மணி நேரம் ஆகிறது எனில், இவ்விமானத்தில் பயணித்தால் 3.5 மணி நேரத்திலேயே நாம்மால் நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு சென்றுவிட முடியும்.

இருப்பினும், நவீன தொழில் நுட்பத்தில் உருவாகும் இவ்வாறான அதிவேக விமானங்களில் மக்கள் தொடர்ந்து பயணிக்கும் வகையில் அதன் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்படுமா? அதன் பாதுக்காப்பு அம்சங்கள் சிறந்து விளங்குமா? என்பதை வைத்தே மீண்டு(ம்) வரும் சூப்பர் சோனிக் விமானங்களின் வெற்றி தோல்வி அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.