படப்பிடிப்பில் மயங்கி விழுந்த அனுபமா!

பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர்
அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்தார். தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வரும் அனுபமா, ஹலோ குரு பிரேமகோசம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரகாஷ்ராஜுக்கு மகளாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகை அனுபமா திடீரென்று மயக்கம் அடைந்து கீழே விழுந்திருக்கிறார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு படக்குழுவினர் அழைத்து சென்று தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் குணமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பிரகாஷுராஜுடன் நடித்துக் கொண்டிருக்கும் போது, வசனத்தை முழுமையாக முடியாமல் அனுபமா திணறி இருக்கிறார். அனுபமாவிற்கு ஏற்கனவே குளிர் காய்ச்சல் இருந்ததாகவும், ரத்த அழுத்தம் குறைவானதாலும் மயக்கம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் குணம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.