மரணதண்டனையை நிறைவேற்றும் தீர்மானம் - ஜெனிவாவில் இலங்கைக்கு சிக்கல்!

மரண தண்டனை நிறைவேற்ற இலங்கை முன்னெடுத்துள்ள தீர்மானம் குறித்து எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி
நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் கேள்வி எழுப்பப்படவுள்ளது. மரண தண்டனையை நீக்குவதாக இலங்கை அரசாங்கம் கடந்த 2015 செப்டம்பர் மாதம் நடந்த ஜெனிவா மாநாட்டில் வாக்குறுதியளித்திருந்தது.
இதனால், எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள மாநாட்டில், இந்த வாக்குறுதியை மீறியமை தொடர்பில் காரணம் முன்வைக்க இலங்கை நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. தூக்குத் தண்டனை நிறைவேற்ற இலங்கை எடுத்துள்ள தீர்மானத்துக்கு சர்வதேச ரீதியிலுள்ள ஐந்து மனித உரிமைகள் அமைப்புக்கள் தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.