ஆட்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய கடற்படை அதிகாரிக்கு சேவை நீடிப்பு வழங்கிய ஜனாதிபதி!

ஆட்கடத்தல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கடற்படையின்
தற்காலிக கொமடோர் டி.கே.பி. தசநாயக்கவுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணி நீடிப்பு வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.ஐந்து இளைஞர்கள் உட்பட 11 பேரை கப்பம் பெறுவதற்காக கடத்திச் சென்று காணாமல் போக செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தசநாயக்கவுக்கு மேலும் ஒரு வருடகாலம் பணி நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த பணி நீடிப்பு தொடர்பாக கடந்த 3 ஆம் திகதி கடற்படை தலைமையகம் அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது. கடற்படை தளபதி இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
டி.கே.பி. தசநாயக்க கடற்படையில் தற்காலிகமாக பதவியில் இருப்பதுடன் அவர் பணியில் இருந்து ஓய்வுபெற வேண்டும். அத்துடன் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள பதவிக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவர் நியமிக்கப்படவில்லை என்றால், ஓய்வுபெற வேண்டும்.
இந்த நிலையில், கடற்படையின் தற்காலிக கொமடோரான டி..கே.பி. தசாநாயக்கவுக்கு இரண்டாவது முறையாக ஜனாதிபதி பணி நீடிப்பை வழங்கியுள்ளார். இந்த பணி நீடிப்பானது 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் திகதியில் இருந்து ஒரு வருடத்திற்கு செல்லுப்படியாகும்.
குற்றச் செயல் ஒன்று தொடர்பில் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் கடற்படை அதிகாரி ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்படுவதே வழமை எனிவும் அதற்கு மாறாக தசநாயக்கவுக்கு பணி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.