வன்முறைகளை கட்டுப்படுத்த இளைய சமூகம் கையிலெடுக்க வேண்டும்!
யாழ்.குடாநாட்டில் தற்போது அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டுமெனில் இந்தப் பிரச்சினைகளை எங்களுடைய இளைய சமூகம் கையிலெடுக்க வேண்டும். இழந்த எங்களுடைய பெருமையை நாங்கள் மீண்டும் நிலைநாட்ட வேண்டுமெனில் எங்களுடைய சமூகம்
ஒட்டுமொத்தமாக விழிப்புணர்வடைய வேண்டியது அவசியமாகும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ். முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தின் முத்தமிழ் விழா-2018 நேற்றுச் செவ்வாய்க்கிழமை(17) வித்தியாலயப் பிரதான மண்டபத்தில் அதிபர் இ.பசுபதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற போது பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தற்போது யாழ்.குடாநாட்டில் கட்டிளமைப் பருவத்திலுள்ள மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை என்பது பாரியதொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எங்களுடைய வீடுகளுக்கு யார்? எப்போது ? வாள்களுடன் வருவார்கள் எனத் தெரியாத நிலையில் தான் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை எமது மாகாணசபை உறுப்பினரொருவருடைய வீட்டுக்குள் சிலர் புகுந்து சுமார் ஒரு மணிநேரமாக நின்று அவர்கள் தங்களுடைய செயற்பாடுகளை முடித்த பின்னர் வெளியேறியிருக்கிறார்கள்.
முன்னர் ஆயுதம் வைத்திருந்த இராணுத்தினரே வன்முறைகளுக்குக் காரணமெனப் பகிரங்கமாகவே கூறியிருந்தோம். ஆனால், தற்போது எங்களுடைய தமிழ் இளைஞர்களே வாள்வெட்டுப் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது மிகவும் வேதனை தரும் விடயமாகும்.
ஒரு சிறியதொரு விடயத்தையேனும் நாங்கள் முரண்பாடாக மேற்கொண்டால் சட்டத்துக்கு அல்லாமல்சமூகத்திற்கு அஞ்சுகின்றதொரு காலமிருந்தது. நாங்கள் சிறுதவறையேனும் செய்து விட்டால் எங்களைச் சார்ந்த உறவுகள் அல்லது அயலவர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்பதான ஒரு மனப்பயம் எங்களுக்கிருந்தது. இந்த உணர்வு தான் எங்கள் சமூகத்தை நல்வழிப்படுத்தியிருக்கிறது.
இத்தகைய சமூகப் பயம் தற்போதைய எமது சமூகத்தினர் மத்தியில் இல்லாமல் போனமை துரதிஷ்டவசமானது. இதற்கு நாமனைவருமே பொறுப்பேற்க வேண்டும்.

.jpeg
)

கருத்துகள் இல்லை