பாத யாத்திரை' பக்தர்கள் - படைத் தளபதி சந்திப்பு!

கதிர்காமத்திற்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களை 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த வன்னியாரச்சி சென்று பார்வையிட்டார்.
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களது பணிப்புரைக்கமைய 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பக்தர்களை சந்தித்தார்.

இவர் பாத யாத்திரை பக்தர்களுக்கு குளிர் பாணங்கள், தண்ணீர் போத்தல்களை வழங்கியதுடன் பக்தர்களுடனும் உரையாடினார்.

இந்த பணிகளில் 23 ஆவது கஜபா படையணியைச் சேர்ந்த படை வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில் மற்றும் குமன பிரதேசத்திலிருந்து இதுவரை 6000 பக்தர்கள் இந்த வழியினூடாக பாத யாத்திரைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.