வர்மா படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர் !

தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `அர்ஜுன் ரெட்டி' படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தின் மூலம் நடிகர் விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவில் நாயனாக அறிமுகமாகிறார்.

பாலா இயக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் துருவ் ஜோடியாக வங்காளத்தை சேர்ந்த நடிகை மேகா சவுத்ரி ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் ஒரு பாடலுக்கு பிக்பாஸ் புகழ் ரைசா நடனம் ஆட இருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளராக ரதன் ஒப்பந்தமாகி இருக்கிறார். தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திற்கு இவர்தான் இசையமைத்திருந்தார்.`வர்மா' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு `குக்கு', `ஜோக்கர்' பட இயக்குநர் ராஜு முருகன் வசனங்களை எழுதுகிறார். இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

No comments

Powered by Blogger.