டொனால்டு ட்ரம்பை முட்டாளாக்கிய கூகுள்!


மெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அவருடைய அதிரடி முடிவுகளால் பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கொண்டு வருகிறார். இதைத்தவிர அவர் மீதான இணையதள தாக்குதல்களும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தற்போதும் உலகின் முன்னணி தேடுபொறி தளமான கூகுளில் முட்டாள் (idiot) என்று தேடினால் ட்ரம்பின் புகைப்படங்கள் தெரிவது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

ட்ரம்பிற்கு எதிராக இணையதள போராட்டத்தை மேற்கொள்பவர்கள், ரெட்டிட் எனும் இணையதளத்தில் ட்ரம்பின் படத்துடன் முட்டாள் என்ற வார்த்தையை இணைக்கும் நூதன போரட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இதற்கான பிரசாரங்களையும் உலகளவில் அவர்கள் வெளிப்படையாகவே மேற்கொண்டுள்ளனர்.

இதனால், தேடலுக்கு கூகுள் உபயோகப்படுத்தும் ‘அல்காரிதம்’ எனும் இணையதளத்தில் முட்டாள் என தேடினால் ட்ரம்பின் படத்தையும் சேர்த்து தேடி பயனருக்கு கொடுக்கிறது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.