கட்டுப்பாட்டை இழந்த பஸ் குடைசாய்ந்தது!
கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று லொறியை முந்திச் செல்ல முற்பட்ட வேளை பஸ் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் குடை சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புத்தளம் கொழும்பு பிரதான வீதி கரிக்கட்டை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன் போது வீதியில் பயணித்துக் கொண்டிருந்த ஆட்டோவின் பின்பக்கத்திலும் மோதியால் ஆட்டோ முற்றாக சேதம் அடைந்துள்ளதுடன் ஆட்டோவில் பயணித்த சிறுவர் உட்பட நான்கு பேர் காயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது பஸ்ஸில் பயணித்த எவருக்கும் காயம் இல்லையென முந்தல் பொலிசார் குறிப்பிட்டனர். பஸ் சாரதியை முந்தல் பொலிசார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை