வடபகுதியில் பேச்சு சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் அரசாங்ம்!.

அந்த நாளும் வந்திடாதோ என்று ஒருவர் அங்கலாய் ப்பது குற்றமல்ல. தமிழீழ விடுதலை புலிகள் மீளவும் உருவாகவேண்டும் என விஐயகலா கூறியது தற்சம யம் உள்ள பாதுகாப்பு சூழலையே. அதற்கு மேல் வன் முறைகளை மீண்டும் தொடக்கும் நோக்குடன் அவர் கூறவில்லை.


மேற்கண்டவாறு வ டமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பான பொலிஸ்பிரிவுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் விஐயகலா மகேஷ்வரன் தமிழீழ விடுதலை புலிகள் குறித்து ஆற்றிய உரை தொடர்பில் திட்டமிட்ட குற்றங்கள் குறித்த விசேட பொலிஸ் பிரிவு இன்று முதலமைச்சர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடாத்தியிருக்கி றது. இந்த விசாரணையினபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மேலும் கூறுகையில்,

திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப்பிரிவு வந்தார்கள். விஜயகலா பேசிய கூட்டத்தில் நானும் பங்கேற்றபடியால் என்னிடம் சில கேள்விகள் கேட்டார்கள்.கௌரவ அமைச்சர்கள் வஜிர அபேவர்த்தன, திலக் மாரப்பன போன்றவர்களிடம் வாக்குமூலம் பெற்றதாகக் கூறினார்கள்.

விஜயகலாவின் பேச்சில் இடம்பெற்ற சில கேள்விக்கிடமான பகுதிகளைப் பற்றி எனது கருத்தைக் கேட்டார்கள் அந்த நாளும் வந்திடாதோ என்று ஒருவர் அங்கலாய்ப்பது குற்றமாகாது என்று கூறினேன்.

புலிகள் திரும்பவும் வர வேண்டும் என்று நாங்கள் பாடுபடுகின்றோம் என்று அவர் கூறியது இந்தப் பாதுகாப்புச் சூழலையே அன்றி வன் முறைகளை மீண்டும் தொடக்கும் நோக்குடன் அவர் கூறவில்லை என்று கூறித் தனது கட்சிக்கு விசுவாசமாகவே இது காறும் அவர் நடந்து வந்துள்ளார் அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றேன்.

அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அது எமது பேச்சுச் சுதந்திரத்தைப் பாதிப்பதாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.