கிளிநொச்சியில் முன்னாள் போராளியின் வாழ்வாதாரத்தை அழித்த துயரம்!

முதலாம் இணைப்பு!
கிளிநொச்சியில் ஒரு ஏழை பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட பசுமாட்டினை இரவோடு இரவாக திருடிச் சென்று இறைச்சிக்காக வெட்டியுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு ஜெயந்திநகரில் அமைந்துள்ள அவரது தற்காலிக வீட்டு வளவில் கட்டியிருந்த பசுவினை திருடிச் சென்று ஜெயந்திநகர் மீனாட்சிஅம்மன் கோவிலருகில் வைத்து வெட்டி இறைச்சியினை எடுத்துவிட்டு எச்சங்களை விட்டுச்சென்றுள்ளனர்

மூன்று மாவீரர்களின் சகோதரியும், காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் போராளியின் மனைவியும் முன்னாள் போராளியுமான இரண்டு பிள்ளைகளின் தாயாரான பெண்ணுக்கு வழங்கப்பட்ட பசுவினையே இவ்வாறு வெட்டியுள்ளனர்

மிகவும் வறுமை கோட்டிற்குள் வாழ்ந்து வரும் இவருக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று இப் பசுவை வாழ்வாதார உதவியாக வழங்கியிருந்தது.


இரண்டாம் இணைப்பு!
ஒரு புலம்பெயர் உறவு தனது தாயாரின் பிற
ந்தநாளை முன்னிட்டு. 2018.03.16 திகதி.
குடியிருக்க நிலம். ,வீடு இன்றி இரண்டு பிள்
ளைகளுடன் மிகவும் வறுமைநிலையிலுள்ள
சகோதரர்கள். மூவர் வீரச்சாவு, கணவர் 
போராளியாக இருந்து காணாமல் ஆக்கப்பட்
டவர்.தந்தையார். நாட்டுப்பற்றாளர் நபரும்
செஞ்சோலையில் இருந்து வளர்ந்த போராளி
இவரின் நிலையறிந்து. மிகவும் பெரிய 15 பால்கறக்கக்கூடிய 
கறவைப்பசுவை அன்பளி
ப்பு செய்திருந்தார். அந்த உயர்ந்த உள்ளம்
கொண்ட நன்கொடையாளன்.

இவ் பசு ஏழுமாத. கன்று சினைப்பட்ட நிலை
யில் நேற்று இரவு . கள்ளக்கும்பல் களவாக
கொன்று. இறைச்சியை கொண்டு சென்று
ள்ளனர். இரு பிள்ளைகள் வீட்டு உரிமையா
ளர் மிகுந்த. கவலையில் வாடுகின்றனர். 
கிளிநொச்சி காவல்த்துறையில் முறைப்பா
டும் இட்டுள்ளனர்.

இருகுழந்தைகளும் அழும். அழுகை எம்மால்
பார்க்க முடியவில்லை. சோதனை மேல் சோதனையாக உள்ளது. இவ் நபருக்கு உங்
களால் முடிந்த உதவிகளை. செய்து வழங்க
முன்வருமாறு. அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் 
தொலைபேசி இலக்கம்

0775582019

குறிப்பு 
குடியிருக்க ஒரு காணியோ. வீடோ இன்றி 
அலைந்து திரிகின்றனர். 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.