வெளிநாட்டில் இலங்கையர் மூவருக்கு கிடைக்கப்பட்ட தண்டனை!

இலங்கையர்கள் மூவருக்கு சிங்கபூரில் எட்டுமாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கபூர் அரசின் குடிவரவுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையினை மேற்கொள்காட்டி அந்த செய்தி வெளிடப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த மூவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்திய குற்றத்திற்காக குறித்த மூவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவை சேர்ந்த ஒருவரின் உதவியுடன் இவர்கள் போலிக்கடவுச் சீட்டை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்க முடியும்” என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.