ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை, சர்வதேச ரீதியாக பாரிய பின்னடைவு!

அதிகளவான புலம்பெயர் இலங்கையர்கள் பயணிக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை, சர்வதேச ரீதியாக பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

உலகின் முதல்தர விமான சேவை தரப்படுத்தலுக்கான Skytrax awards 2018 தரப்படுத்தல் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் விமான சேவை முன்னிலையில் உள்ளது. இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் விமான சேவை 95வது இடத்தை பிடித்துள்ளது.

2018ஆம் ஆண்டில் 81வது இடத்தை பிடித்த ஸ்ரீலங்கன் இம்முறை 14 இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இந்த தரப்படுத்தலுக்கமைய 2011ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவை 52 வது இடத்தில் இருந்த நிலையில், 2016ஆம் ஆண்டு 67 இடத்தை பிடித்திருந்தது.

Skytrax awards தரப்படுத்தலுக்கமைய தொடர்ந்து இலங்கை பின்தள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை பாரிய கடன் சுமையில் சிக்கியுள்ளது. கடந்த ஆட்சியின் போது ஏற்பட்ட பாரிய ஊழல் மோசடியே இதற்கு பிரதான காரணமாகும்.

இதன் காரணமாக சிறந்த சேவையை வழங்க ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தவறி வருவதாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் அதிக நன்மதிப்பை பெற்றிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவை, தற்போது இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களால் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.

இவ்வாறான நிலை நீடிக்கும் பட்சத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் முழுமையாக மூடப்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் சிறந்த முதல் பத்து விமான சேவை நிறுவனங்கள்

1. Singapore Airlines

2. Qatar Airways

3. ANA All Nippon Airways

4. Emirates

5. EVA Air

6. Cathay Pacific

7. Lufthansa

8. Hainan Airlines

9. Garuda Indonesia

10. Thai Airways

#SriLanka   #Srilanka_Air_Lines  #TamilNews   #Forigen_Tamil_People

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.