கைவிடப்பட்டுள்ள சிறிய குளங்களை புனரமைக்க 100 கோடி ரூபா ஒதுக்கீடு


நாடளாவிய ரீதியில் கைவிடப்பட்டுள்ள சிறிய குளங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதற்காக 1500 சிறிய குளங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பணிப்புரைக்கு அமைய, கமநல சேவைகள் திணைக்களம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.
இதற்கென 100 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.