ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்ட 11 இளைஞர்கள் கைது!

ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்ட 11 இளைஞர்களை பொலிஸார் நேற்று (4) கைதுசெய்துள்ளனர்.
தென்மராட்சி பகுதியில் றேற்று மேற்கொண்ட தேடுதலின் போது, சாவகச்சேரி, சரசாலை, மறவன்புலோ உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 11 இளைஞர்களையே மானிப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அண்மைக்காலமாக இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்களின் பின்னர், யாழ்ப்பாணம் உட்பட மானிப்பாய், சுன்னாகம், கோப்பாய் பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டு, வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், றேற்று (04) மானிப்பாய் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சாவகச்சேரி, சரசாலை, மறவன்புலோ பகுதியைச் சேர்ந்த 11 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 4 வாள்கள், 1 மோட்டார் சைக்களில் மற்றும் கையில் பாவிக்கும் செயின்கள், உட்பட இரும்பு ஆயுதங்களும் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களின் வீடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் 18 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட்வர்கள் என்றும், இவர்களில் 4 பேர் இந்த வருடம் உயர்தரம் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றதாகவும் மானிப்பாய் பொலஸார் மேலும் தெரிவித்தனர். 
Powered by Blogger.