பிரான்ஸ் பிரஜைக்கு 30 மாத சிறைத்தண்டனை!

இலங்கையர் ஒருவருக்கு உதவி செய்த பிரான்ஸ் நாட்டவர் ஒருவருக்கு 30 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணையின் போது 32 வயதான பிரான்ஸ் பிரஜைக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் இலங்கையர் ஒருவர், குறித்த பிரான்ஸ் நாட்டவரின் உதவியுடன் போலியான கடவுச்சீட்டு மற்றும் போர்டிங் பாஸைப் பயன்படுத்தி விமானத்தில் பயணித்துள்ளார்.

எனினும் இந்த கடவுச்சீட்டு போலியானதென குடிவரவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அத்துடன் இந்த மோசடிக்கு பின்னர் பிரான்ஸ் நாட்டவர் உள்ளார் என தெரியவந்துள்ளது.

வழக்கு விசாரணையின் போது குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட பிரான்ஸ் நாட்டவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடவுச்சீட்டிற்காக பணம் பெற்றுக் கொண்டதனை பிரான்ஸ் நாட்டவர் ஏற்றுக்கொண்டுள்ளார் என அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

#France   #Srilankan  #Tamilnews 
Powered by Blogger.