வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் பாலகுமார் எங்கே??

மருதையாற்றுபாலம் வெடிகுண்;டு சம்பவத்திற்கு பின்பு தோழர் தமிழரசன் மிகவும் தீவிரமாக தேடப்பட்டார்.
அவருக்கு உதவி செய்தது “பேரவை” இயக்கத்தினரான நானும் நெப்போலியனும் என்பதை இந்திய உளவுப்படை அறிந்து கொண்டது.
இதனால் என்னையும் நெப்போலியனையும் கொலை செய்யும்படி ஈரோஸ் இயக்கத்திடம் “றோ” உளவு அமைப்பு கேட்டுக்கொண்டது.
இதை அறிந்த ஈரோஸ் தலைவர் பாலகுமார் உடனே என்னை மெரினா கடற்கரையில் இரகசியமாக சந்தித்து “ உங்களை கொல்லும் பாவத்தை நான் செய்யமாட்டேன். ஆனாலும் கவனமாக இருங்கள்” என்று எச்சரித்தார்.
ஆனால் அப்போது மலையகத்தில் இருந்த நெப்போலியனுக்கு இத் தகவலை அனுப்பு முன்னர் ஈரோஸ் ராணுவ பொறுப்பாளர் சங்கர்ராஜியினால் அவர் கொல்லப்பட்டு விட்டார்.
பாலகுமார் முள்ளிவாய்க்காலில் தன் மகனுடன் சரணடைந்தார். அவர் உயிரோடு வைக்கப்பட்டிருந்த படங்களும் வெளிவந்துள்ளன.
ஆனால் பாலகுமார் இதவரை விடுதலை செய்யப்படவில்லை. தற்போது அவர் பெயரும் காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
சரணடைந்த பாலகுமாரை புலிகளுக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்குமாறு கேட்கப்பட்டதாகவும் அவர் மறுத்தபடியால் அவரும் மகனும் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத் தகவல் எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஒருவேளை அவர் அரசுக்கு ஒத்துழைத்திருந்தால் கருணா போன்று அமைச்சராகவும் இருந்திருகலாம்.
ஆனால் இங்கு கொடுமை என்னவெனில் சமாதான காலத்தில் வன்னி சென்று பாலகுமாரோடு படம் பிடித்தவர்கள பலர் இன்று எம்.பி களாகவும் தலைவர்களாகவும் இருக்கின்றனர்.
இவர்களில் ஒருவர்கூட பாலகுமார் எங்கே என்று இலங்கைஅரசை இதுவரை கேட்கவில்லை.
குறிப்பு- இன்று “சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்” ஆகும். அதற்கான பதிவு இது.

No comments

Powered by Blogger.