வரலாற்றைக்கொண்ட தமிழர் ஆலயம்!

ஆலயங்களை புனரமைக்கும் போது தொல்லியல் திணைக்களமும், மக்கள் தமது காணிகளில் மீளக் குடியமரும்போது வன இலாகப் பிரிவினரும் தடைகள் விதிக்கின்றனர் என வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.வவுனியா வெடுக்குநாறி மலைக்கு இன்று விஜயம் மேற்கொண்ட அனந்தி சசிதரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மூவாயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட தமிழர்களுடைய ஆலயமாக இந்த சிவன் ஆலயம் விளங்கிவருகிறது.அந்நிய படையெடுப்புகள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக வழிபாடுகளுக்கு தடை ஏற்பட்டதன் பின்னர் தற்போது இராணுவ சூழல் மறைந்த நிலையில் தொல்லியல் திணைக்களம் தடைகளை விதிக்கின்றது.

ஆலயங்களை புனரமைக்கும் போது தொல்லியல் திணைக்களமும், மக்கள் தமது காணிகளில் மீளக் குடியமரும்போது வன இலாகப் பிரிவினரும் தடைகள் விதிக்கின்றனர்.

அத்துடன், நெற்செய்கையின்போது மகாவலி அதிகார சபையினர் எமது நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.

#Ananthi   #vavuniya   #srilanka  #hindu  

No comments

Powered by Blogger.