எங்கள் கடல் மகள் அக்கா அங்கயற்கண்ணி !

முதற் கடற்கரும்புலி கப்டன் அங்கற்கண்ணி அவர்களினால் காங்கேசன்துறை கடற்பரப்பில் மூழ்கடிப்பட்ட கப்பலின் நங்கூரத்தினை மீன்பிடி சுழியோடிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கடல்அட்டை பிடிப்பதற்கு சென்ற மீனவர்கள் குறித்த நங்கூரத்தினை கரையில் இருந்து 1கிலோ மீற்றர் தூரத்தில் வைத்து கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் பாரிய பேராட்டத்தின் பின் கடலில் மூழ்கி இருந்த நங்கூரம் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

(21) காங்கேசன்துறை கடற்பரப்பில் ஒரு சில மீனவர்கள் கடல்அட்டை பிடிப்பதில் ஈடுபட்டிருந்தனர். இதன் குறித்த நங்கூரம் கைபெற்றப்பட்டிருந்தது.

15அடி நீளமானதாக காணப்படும் நங்கூரம் ஒரளவு துருப்பிடித்த நிலையில் முருகைகற்கள் அவற்றை சுற்றி வளர்ந்துள்ளனர். அன்னளவாக இது 1தொன் வரை நிறையுடையது என மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலதிகமாக இதனுடன் இணைந்து சிறிய நங்கூரம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. தமிழிழ விடுதலை போரட்ட வரலாற்றியில் முதற் கடற்றரும்புலி கப்டன் அங்கற்கண்ணி என போற்றப்படும் கப்டன் அங்கயற்கண்னி 1994ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் 16ம் திகதி கடற்படையினரின் கட்டளைகப்பலையும், டோறாப்படகினை தகர்த்து வீரச்சாவினை அடைந்திருந்தார்


No comments

Powered by Blogger.