இளைஞன் இறப்பில் மர்மம் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது!

வவுனியா ஓமந்தை மாதர்பனிக்கர் மகிழங்குளம் பகுதியில் விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஒருபிள்ளையின் தந்தை மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதால் அவரது சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கையிடுமாறு மாவட்ட மேலதிக நீதவான் உத்தரவட்டிருந்தார்.

அதன் பிரகாரம் வவுனியா வைத்தியசாலையில் அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. உடற்கூற்று அறிக்கையின் படி அவரது உடலில் அடிகாயங்கள் காணப்பட்டதுடன்,தலை பகுதியில் காயம் ஏற்பட்டதால் உயிரிழந்திருந்தாகத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான விசாரனைகளை ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்டு வந்ததுடன் அதே பகுதியை சேர்ந்த இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்திருந்தனர். இந்த நிலையில் மேலும் இருவர் கைதுசெய்யபட்டுள்ளனர் 

No comments

Powered by Blogger.